பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு 'சீல்'
விருதுநகரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலக கட்டிடத்துக்கு சீல் வைத்தனர்.
விருதுநகரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலக கட்டிடத்துக்கு சீல் வைத்தனர்.
வாடகை கட்டிடம்
விருதுநகர் பாவாலி ரோட்டில் உள்ள ஒரு கட்டிடத்தின் மாடியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்போது மத்திய அரசு இந்த அமைப்புக்கு நாடு முழுவதும் தடை விதித்துள்ள நிலையில் பல்வேறு பகுதிகளில் முக்கிய நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்படுகிறது.
அதோடு அந்த அமைப்பின் அலுவலகங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையும் தொடர்கிறது. இந்நிலையில் விருதுநகரில் செயல்பட்டு வந்த மாவட்ட அலுவலக கட்டிடத்தை அதன் நிர்வாகிகள் கடந்த 15 நாட்களுக்கு முன்பே காலி செய்துவிட்டு, கட்டிட உரிமையாளரிடம் சாவியை ஒப்படைத்துவிட்டதாக கூறப்படுகிறது.
சீல் வைப்பு
எனினும் நேற்று அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ. கல்யாண்குமார் முன்னிலையில் விருதுநகர் பாண்டியன் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுலோச்சனா ஆகியோர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகம் செயல்பட்ட கட்டிடத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.