பழமையான கட்டிடத்துக்கு 'சீல்'

திண்டுக்கல்லில் பழமையான கட்டிடத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

Update: 2022-10-11 18:45 GMT

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் இடிந்து விழும் நிலையில் இருக்கும் பழமையான கட்டிடங்களை கண்டறியும் பணி நடக்கிறது. மேலும் அபாய நிலையில் இருக்கும் கட்டிடங்களை இடித்து அகற்றும்படி மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே இடிந்து விழும் நிலையில் உள்ள பழமையான கட்டிடம் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கட்டிடத்துக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் அந்த கட்டிடத்தை இடித்து அகற்ற ஐகோர்ட்டும் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அந்த கட்டிடத்தை 'சீல்' வைக்கும்படி மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.


அதன்பேரில் அந்த கட்டிடத்துக்கு குடிநீர் மற்றும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும் நகரமைப்பு அலுவலர் சேதுராஜன், ஆய்வாளர்கள் சந்திரா, தன்ராஜ், சாந்தி மற்றும் கிழக்கு தாசில்தார் சந்தனமேரிகீதா உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று அங்கு சென்றனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அந்த கட்டிடத்துக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்தனர். இதேபோல் பழமையான கட்டிடம் பயன்பாட்டில் இருப்பது தெரியவந்தால் 'சீல்' வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.





Tags:    

மேலும் செய்திகள்