பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகத்துக்கு 'சீல்'

வேலூரில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2022-09-30 17:10 GMT

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்தனர். இதையடுத்து அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் வேலூர் சைதாப்பேட்டை பி.டி.சி. சாலையில் அமைந்துள்ள அந்த அலுவலகத்தை வேலூர் உதவி கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் செந்தில் மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு ஆகியோர் பூட்டி சீல் வைத்தனர். மேலும் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்