வரி செலுத்தாத கடைகளுக்கு 'சீல்'
வரி செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
புதுக்கோட்டையில் நகராட்சியில் நிலுவை வரிகளை வசூல் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் முறையாக வரி செலுத்தாத கடைகளுக்கு 'சீல்' வைத்து வருகின்றனர். மேலும் நிலுவை வரிகளை வசூல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை நகரப்பகுதியில் வரி செலுத்தாத 7 கடைகளுக்கு 'சீல்' வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.