விதிமுறை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு 'சீல்'
விதிமுறை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திருச்சி தில்லைநகர் 4-வது வளைவுரோடு பகுதியில் இருந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவின்பேரில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர்கள் சமீபத்தில் வீடுகளை காலி செய்தனர். இதனை தொடர்ந்து, நேற்று காலை மாநகராட்சி கோ-அபிஷேகபுரம் கோட்டம் உதவி ஆணையர் சதீஷ்குமார் தலைமையில் அங்கு வந்த அதிகாரிகள் அடுக்குமாடி குடியிருப்பை பூட்டி 'சீல்' வைத்தனர். இதையொட்டி அங்கு தில்லைநகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.