பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு 'சீல்' வைப்பு

கடையநல்லூரில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2022-10-27 18:45 GMT

கடையநல்லூர்:

இந்தியா முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் கடையநல்லூர் பள்ளிக்கூட தென்வடல் தெரு பகுதியில் வாடகை கட்டிடத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் செயல்பட்டு வருவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தென்காசி உதவி கலெக்டர் கங்காதேவி, புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக், கடையநல்லூர் தாசில்தார் சண்முகம், வருவாய் ஆய்வாளர் காசிலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் மணிவண்ணன், கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், தயாளன் மற்றும் போலீசார் நேற்று காலை அந்த அலுவலகத்துக்கு சென்று சோதனை நடத்தினர். தொடர்ந்து அலுவலகத்துக்கு 'சீல்' வைத்தனர். இதையொட்டி ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். புளியங்குடி பகுதியில் இயங்கி வந்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் அலுவலகம் தற்போது மளிகை கடையாக செயல்பட்டு வருவதால், அங்கு சென்ற அதிகாரிகள் 'சீல்' வைக்காமல் திரும்பி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்