ஓட்டலுக்கு 'சீல்' வைப்பு
திசையன்விளையில் ஓட்டலுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
திசையன்விளை:
திசையன்விளை - நவ்வலடி ரோட்டில் ராம் ரத்தினம் என்பவர் பேரூராட்சி அனுமதியின்றி கடை கட்டி அதை ஓட்டல் நடத்த வாடகைக்கு விட்டுள்ளார். அதை எதிர்த்து அவரது உறவினர் சீனிவாசன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் இதில் சீனிவாசனுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. அதை எதிர்த்து ராம் ரத்தினம் மதுரை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நேற்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து நேற்று மாலை அனுமதியின்றி கட்டிய கடையில் இயங்கிவந்த ஓட்டல் காலி செய்யப்பட்டது. திசையன்விளை தாசில்தார் ராஜேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் சாஜன் மத்யூ, சுகாதார ஆய்வாளர் நவராஜ், கிராம நிர்வாக அலுவலர் அயூப் கான், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் முன்னிலையில் கடை பூட்டி 'சீல்' வைக்கப்பட்டது.