அனுமதியின்றி செயல்பட்ட 3 பார்களுக்கு 'சீல்' வைப்பு
மணல்மேடு பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட 3 பார்களுக்கு ‘சீல்’ வைப்பு டாஸ்மாக் மேலாளர் நடவடிக்கை
மணல்மேடு:
மணல்மேடு போலீஸ் சரகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஒட்டிய பார்களில் நாகை, மயிலாடுதுறை மாவட்ட டாஸ்மாக் மேலாளர் வாசுதேவன் மற்றும் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மல்லியக்கொல்லை, பட்டவர்த்தி, ஆத்தூர் ஆகிய மூன்று இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஒட்டி பார்கள் அரசு அனுமதி இல்லாமல் இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த 3 பார்களுக்கும் சீல் வைத்தனர். மேலும் மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு அனுமதி இல்லாமல் இயங்கி வரும் அனைத்து பார்களும் மூடப்படும் என்று டாஸ்மாக் மேலாளர் தெரிவித்தார்.