நகராட்சி கடைகளுக்கு வைத்த சீல் உடைப்பு

ஆரணியில் நகராட்சி கடைகளுக்கு வைத்த சீல் உடைப்பு

Update: 2022-06-30 12:47 GMT

ஆரண

ஆரணி அண்ணா சிலை அருகில் நகராட்சிக்கு சொந்தமான செல்வரசு மாளிகை உள்ளது.

இங்கு கடை வைத்துள்ள 3 பேர் கடைக்கு வாடகை செலுத்தாமல் ரூ.8 லட்சத்து 14,377 பாக்கி வைத்துள்ளனர்.

இதனால் நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் மோகன் மற்றும் வரி தண்டலர், களப்பணியாளர்களைக் கொண்டு கடந்த 6-ந் தேதி 3 கடைக்கும் சீல் வைத்தனர்.

ஆனால் 7-ந் தேதி காலையில் சீல் வைத்த கடைகள் திறந்திருந்தது.

இதுகுறித்து ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் நகராட்சி ஆணையாளர் தமிழ்ச்செல்வி புகார் கொடுத்தார். அதில் கடைகளுக்கு வைக்கப்பட்ட சீல் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.


Tags:    

மேலும் செய்திகள்