உரக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது

குன்னத்தூரில் உரங்கள் வாங்க வற்புறுத்தியதால் உரக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது

Update: 2022-11-14 18:52 GMT


குன்னத்தூரில் உரங்கள் வாங்க வற்புறுத்தியதால் உரக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது

குன்னத்தூர் அருகே விருமாண்டம்பாளையத்தைச் சேர்ந்த வர் விவசாயி சுப்பிரமணி (வயது 55). இவர் குன்னத்தூர் ஊத்துக்குளி ரோட்டில் உள்ள ஒரு உரக்கடைக்கு சென்று ஒரு மூட்டை யூரியா உரம் கேட்டார். ஆனால் கடை விற்பனையாளர், யூரியா உரம் வேண்டுமானால் காம்ப்ளக்ஸ் உரமும் சேர்த்து வாங்க வேண்டும் அப்போதுதான் யூரியா உரம் கிடைக்கும் என்றார். யூரியா உரம் ஒரு மூட்டை ரூ.300. காம்ப்ளக்ஸ் உரம் ரூ.800. இதனால் மொத்தம் ரூ.1,100 வேண்டும். சுப்பிரமணி யூரியா மட்டும் கேட்டபோது விற்பனையாளர் அவ்வாறு யூரியா மட்டும் கொடுக்க முடியாது என்று கண்டிப்பாக கூறியுள்ளார். இது பற்றி உரக்கடை உரிமையாளரிடம் புகார் தெரிவித்தார். அவரும் 2 உரங்களையும் சேர்த்து வாங்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி இது பற்றி ஊத்துக்குளி வேளாண்மை உதவி இயக்குனர் சசிரேகாவிடம் புகார் அளித்தார். அவரும் உரக்கடை உரிமையாளரிடம் கேட்ட ேபாது கண்டிப்பாக காம்ப்ளக்ஸ் உரம் வாங்கினால் மட்டுமே யூரியா உரம் கிடைக்கும் என்று கூறியதாக தெரிகிறது. உடனே விவசாயி சுப்பிரமணி திருப்பூர் மாவட்ட கலெக்டர், திருப்பூர் மாவட்ட வேளாண்மை அலுவலரிடம் புகார் செய்தார். இதையடுத்து நேற்று மாவட்ட வேளாண்மை அலுவலர் அந்த உரக்கடைக்கு நேரில் சென்று விசாரணை நடத்தி 7 நாட்களுக்கு உரக்கடைக்கு 'சீல்' வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்