கடல் குதிரைகள் கடத்தியவர் கைது
கடல் குதிரைகள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் வனச்சரகர் சுரேஷ்குமார் தலைமையிலான வனத்துறையினர் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோழியக்குடி பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மொபட்டில் வந்தவரை பிடித்து சோதனை செய்தனர்.
அவரிடம் இருந்த பையை சோதனையிட்டபோது, அரிய வகை கடல்வாழ் உயிரினமான 90 கடல் குதிரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடல் குதிரைகளை பறிமுதல் செய்த வனத்துறையினர் இது தொடர்பாக தேவிப்பட்டினம் வடக்குத்தெரு பகுதியை சேர்ந்த சங்கு வியாபாரியான நாகநாதன் (வயது 57) என்பவரை கைது செய்தனர்.