நாகை, வேளாங்கண்ணியில் கடல் சீற்றம்

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக நாகை, வேளாங்கண்ணியில் கடல் சீற்றம் காணப்பட்டது.

Update: 2022-12-09 18:45 GMT


வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் நாகை மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்தது. கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக நாகை, வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் நேற்று 5-வது நாளாக மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நாகை துறைமுக அலுவலகத்தில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்