150 கிலோ கடல் அட்டை பறிமுதல்
150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் கடல் அட்டை பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து ராமநாதபுரம் வனச்சரகர் திவ்யா தலைமையில் வனத்துறையினர் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தேவி பட்டினம் சித்திக் என்பவரின் வீட்டில் கடல் அட்டைகளை அவித்து கொண்டிருந்ததை வனத்துறையினர் கைப்பற்றினா். சுமார் 150 கிலோ எடையுள்ள கடல் அட்டைகளை கைப் பற்றிய வனத்துறையினர் இது தொடர்பாக முள்ளிமுனை பகுதியை சேர்ந்த செய்யது என்பவரின் மகன் நைனார் முகம்மது (வயது 52) என்பவரை பிடித்து விசாரித்து வருகின் றனர். இந்த கடல் அட்டை பிடிபட்டது தொடர்பாக தேவிபட்டினம் சித்திக் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.