பழனியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
பழனியில் மின்கட்டண உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில், பழனி மயில் ரவுண்டானா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொதுச்செயலாளர் முபாரக்அலி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கைசர்அலி, செயலாளர் ஆசிக் முகமது, பொருளாளர் தமீம் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்துவதை கண்டித்தும், அதை உடனடியாக குறைக்க வலியுறுத்தியும், மாதாந்திர மின்கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த வேண்டும் என்று கோரி கோஷம் எழுப்பினர்.
இதற்கிடையே ஆர்ப்பாட்டம் நடந்த பகுதியில் சிமினி விளக்கு வைத்தும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும் கட்சியினர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.