எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சாைல மறியல்
ஆம்பூரில் மறியலில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை சார்ந்த உறுப்பினர்களை தேசிய புலனாய்வு முகமை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்வதை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆம்பூரில் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 36 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த மறியலால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.