எஸ்.டி.பி.ஐ.கட்சி பொதுக்கூட்டம்
சங்கராபுரத்தில் எஸ்.டி.பி.ஐ.கட்சி பொதுக்கூட்டம் நடந்தது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் சங்கராபுரத்தில் நடைபெற்றது. இதற்கு தொகுதி தலைவர் பாபு தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் சையத் கவுஸ், தொகுதி பொருளாளர் ரஹமத்துல்லா, மாவட்ட செயலாளர் தர்பார், மாவட்ட அமைப்பு பொதுச் செயலாளர் சிராஜ்தீன், மாவட்ட பொருளாளர் சையத் தாஹிர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் முகமத் ரபி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் உமர்பாரூக் கலந்து கொண்டு இந்திய மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் பாசிச சக்திகளை வீழ்த்த எஸ்.டி.பி.ஐ. கட்சியில் அணி திரள வேண்டும் என்றார். தொடர்ந்து விழுப்புரம் மண்டல தலைவர் ஷபீக்அஹம்மது, மாநில பேச்சாளர் சஹானா ஆலிமா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் நிர்வாகிகள் ஷா நவாஸ்கான், காதர், அபுபக்கர், இப்ராஹிம்ஷெரீப், சங்கராபுரம் நகர நிர்வாகிகள் ஆசாத் அலி, சையத்ரஷீத், குடுஜான், சையத் தஸ்தகீர், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மாவட்ட செயலாளர் தாஜ்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் தலித்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.