எஸ்.டி.பி.ஐ. கட்சி செயற்குழு கூட்டம்

களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சி செயற்குழு கூட்டம் நடந்தது.

Update: 2022-12-02 19:45 GMT

களக்காடு:

களக்காட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நகர செயலாளர் காஜா முகைதீன் தலைமையில் நடைபெற்றது. நகர இணை செயலாளர் ஆரிப்பைஜி, நகர செயற்குழு உறுப்பினர்கள் ராம்நாடு பீர்முகம்மது, கபீர் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை புறநகர் மாவட்ட பொதுச் செயலாளர் களந்தை மீராசா கலந்து கொண்டு பேசினார். இதில் களக்காடு புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த பயணிகள் நிழற்குடை மற்றும் வானொலி நிலைய ஆக்கிரமிப்புகளையும், அதன் அருகே உப்பாற்றில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 12 அடி பாதை ஆக்கிரமிப்பையும் அகற்றக்கோரி பிரசாரம் செய்வது, டிசம்பர் 6-ந்் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தில் ஏர்வாடியில் நடக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளாக பங்கேற்பது, களக்காடு 17-வது வார்டு பகுதிகளில் சாக்கடைகளை சுத்தம் செய்யவும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மனங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வர்த்தகர் அணி துணை தலைவர் உசேன், செயற்குழு உறுப்பினர்கள், ஆதம், முகம்மது அலி கலந்து கொண்டனர். நகர செயற்குழு உறுப்பினர் முகம்மது ரபிக் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்