எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2022-06-14 13:52 GMT

சங்கரன்கோவில்:

இறைத்தூதர் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்ட நுபுர்சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று கோரி சங்கரன்கோவில் தேரடி திடலில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் அபுதாஹீர் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சிக்கந்தர், 20-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஷேக் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர இணைச்செயலாளர் அப்துல் நசீர் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் யாசர் கான், ஆல் இந்தியா இமாம் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் சவுக்கத் அலி உஸ்மானி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் வக்கீல் லுக்மான் ஹக்கீம் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் ஷேக் முகம்மது நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்