விவசாயிக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது

களக்காடு அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-26 20:00 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள வடக்கு மீனவன்குளத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). விவசாயியான இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் மகன் சுப்பிரமணியன் என்ற பந்தல் மணிக்கும் (35) இடையே தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ஆறுமுகம் அங்குள்ள டீக்கடை முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சுப்பிரமணியனுக்கும், ஆறுமுகத்திற்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பிரமணியன், ஆறுமுகத்தை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதில் காயமடைந்த ஆறுமுகம் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுப்பிரமணியனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்