தங்கையின் கணவரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

குத்தாலம் அருகே விவாகரத்து வழக்கில் ஆஜராகாததால் தங்கையின் கணவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-08 18:22 GMT

குத்தாலம்:

குத்தாலம் அருகே விவாகரத்து வழக்கில் ஆஜராகாததால் தங்கையின் கணவரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தந்தை வீட்டுக்கு சென்றார்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கிழமாந்தை, மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் தெய்வசகாயம் மகன் ஆல்பர்ட் (வயது 35). ஸ்ரீகண்டபுரம் அருகே இ.சேவை மையம் மற்றும் ஸ்டேஷனரி கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவருக்கும் தஞ்சை மாவட்டம் அம்மன்குடி கிராமத்தை சேர்ந்த ஜோசப்ராஜ் மகள் ஆரோக்கிய தேவி (27) என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆல்பர்ட்டின் நடவடிக்கை பிடிக்காததால் திருமணமான 2 மாதத்திலேயே ஆரோக்கியதேவி கணவரை பிரிந்து தனது தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.

தங்கையின் கணவருக்கு அரிவாள் வெட்டு

இவர்களின் விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.இந்த வழக்கு விசாரணைக்கு ஆல்பர்ட் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆரோக்கிய தேவியின் அண்ணன் ஆரோக்கிய ஸ்ரீதர் (32) நேற்று முன்தினம் இரவு ஸ்ரீகண்டபுரத்துக்கு வந்து கடையில் இருந்த ஆல்பர்ட்டை தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவரது தலை, கழுத்து, கை, கால் உள்ளிட்ட உடலில் பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது.

வாலிபர் கைது

படுகாயம் அடைந்த ஆல்பர்ட்டை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்த புகாரின ்பேரில் பாலையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கிய ஸ்ரீதரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்