பால் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு
முன்விரோதம் காரணமாக பால் வியாபாரியை அரிவாளால் வெட்டிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொல்லங்கோடு:
முன்விரோதம் காரணமாக பால் வியாபாரியை அரிவாளால் வெட்டிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நித்திரவிளை அருகே உள்ள ஆலங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 42), பால் வியாபாரி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பொருளாளராகவும் உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்ராஜன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் சம்பவத்தன்று அதிகாலை ஸ்ரீகுமார் அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் கொண்டு கொடுக்க சென்றார். அப்போது சுரேஷ்ராஜன் மற்றும் அவரது 13 மற்றும் 15 வயதுடைய 2 மகன்கள் ஆகியோர் சேர்ந்து மறைந்து இருந்து அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த ஸ்ரீகுமார் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கொல்லங்கோடு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சுேரஷ்ராஜன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.