லால்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு

லால்குடியில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2022-07-27 19:22 GMT

லால்குடி அருகே உள்ள மும்முடிசோழமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மகன் ஹரி. கடந்த சில நாட்களுக்கு முன்பு மகேந்திரனை, வடக்கு அய்யன் வாய்க்கால் கரை பகுதியைச் சேர்ந்த சிலர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதற்கு லால்குடி வளையல்காரத் தெருவைச் சேர்ந்த மகேஷ்பாபு மகன் ரவிபிரகாஷ் (20) என்பவர் தான் காரணம் என்று நினைத்து அவரை ஹரி, அவரது நண்பர் பிரவீன் மற்றும் சிலர் சேர்ந்து அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனராம். இதில் பலத்த காயம் அடைந்த ரவிபிரகாஷ் லால்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்