ஜாமீனில் வந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு

களக்காடு அருகே ஜாமீனில் வந்த வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-07-20 20:20 GMT

களக்காடு:

களக்காடு அருகே உள்ள எஸ்.என்.பள்ளிவாசலை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 29). மில் தொழிலாளி. இவரை கடந்த 28-ந் தேதி 4 பேர் மிரட்டி செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி இதுதொடர்பாக களக்காடு ஜெ.ஜெ.நகரை சேர்ந்த அக்பர் அலி (19) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்த நிலையில் நேற்று அக்பர் அலி பறையன்குளம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்மநபர்கள் அரிவாளால் அக்பர் அலியை வெட்டினர். இதில் காயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்