தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; பால் வியாபாரி கைது

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டிய பால் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-23 18:45 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி அம்பிகாபுரம் பகுதியில் வசித்து வருபவர் கோவிந்தன் மகன் ராதாகிருஷ்ணன்(வயது 50). சென்னை கியாஸ் கம்பெனியில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் கருத்தன் மகன் ராஜகோபால்(62). பால் வியாபாரம் செய்து வருகிறார். ராஜகோபால் மனைவி செல்வியிடம் ராதாகிருஷ்ணன் அடிக்கடி பேசி வந்ததாகவும், இதனால் ராதாகிருஷ்ணன் மீது ராஜகோபாலுக்கு சந்தேகம் ஏற்பட்டு இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சோழமாதேவி கடைவீதிக்கு ராதாகிருஷ்ணன் சாப்பிடச் சென்றபோது, அங்கு வந்த ராஜகோபால் தகாத வார்த்தைகளால் திட்டி அவர் மறைத்து வைத்திருந்த அறிவாளால் சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ராதாகிருஷ்ணனை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து ராதாகிருஷ்ணனின் மனைவி மாரியம்மாள் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் வழக்குப்பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்து ஜெயங்கொண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்