தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; தந்தை- மகனுக்கு வலைவீச்சு

ஏரலில் தொழிலாளியை அரிவாளால் வெட்டிய தந்தை- மகனை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2023-06-06 18:45 GMT

ஏரல்:

ஏரல் அருகே உள்ள திருப்பணிசெட்டியாபத்து ஊரைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் ராஜா (வயது 39). இவர் ஏரல் மெயின் பஜார் பழக்கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று மாலையில் கடையில் நின்று கொண்டு இருந்தார். அப்போது ஒரு காரில் ஏரல் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலர் ரமேஷ், அவரது மகனும், 1-வது வார்டு கவுன்சிலருமான கவுதம் மற்றும் 2 பேர் காரில் வந்து இறங்கி உள்ளனர். அப்போது ரமேஷ், ராஜாவை பார்த்து தகாத வார்த்தையில் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் ரமேஷின் மகன் கவுதம் கையில் வைத்திருந்த வாளால் அவரது தலையில் வெட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து 4 பேரும் தப்பிச் சென்றனர். காயம் அடைந்த ராஜாவை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கவுன்சிலர்களான தந்தை, மகன் மற்றும் 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்