தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
நெல்லை அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
பேட்டை:
நெல்லை அருகே சுத்தமல்லி ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் உய்க்காட்டான் மகன் முப்புடாதி (வயது 26). கூலித் தொழிலாளி. இவரும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் அய்யப்பன் (24) என்பவரும் அப்பகுதியில் மது அருந்தும்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
பின்னர் அய்யப்பன் திடீரென அவரது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து முப்பிடாதியை வெட்டினார். இதில் காயம் அடைந்த அவர், நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து அயயப்பனை தேடி வருகிறார்.