தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

சாத்தான்குளம் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-20 18:45 GMT

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகேயுள்ள செங்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 59). தொழிலாளி. இவருக்கும், அவரது சகோதரர் தங்கவேல் என்பவரது மகன் அதே பகுதி வடக்கு தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற பாண்டிக்கும் (43) இடையே குடும்ப பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சண்முகசுந்தரம் வீட்டில் இருந்தபோது அங்கு சென்ற பாலசுப்பிரமணியன் அரிவாளால் வெட்டிவிட்டு ஓடிவிட்டாரம். இதில் காயம் அடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்.

இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்சன் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்