உப்பள தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

முள்ளக்காடு அருகே உப்பள தொழிலாளியை அரிவாளால் வெட்டிய அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-07 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி முள்ளக்காடு அருகே உள்ள ராஜீவ்நகர் 7- வது தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது52). உப்பள தொழிலாளி. சம்பவத்தன்று இவரை அதே பகுதியைச் சேர்ந்த ஜேசுராஜ் மகன்களான சதீஷ்குமார் (25), சுதாகர் (28) ஆகியோர் அவதூறாக பேசி அரிவாள் வெட்டியதுடன், கற்களால் தாக்கியுள்ளனர். பின்னர் அதே பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவரான கற்பகராஜ் (28) என்பவரையும் அவர்கள் தாக்கி உள்ளனர்.

இதில் காயமடைந்த முனியசாமி, கற்பகராஜ் ஆகிய 2 பேரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ்குமார், சுதாகர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்