விவசாயிக்கு அரிவாள் வெட்டு
நிலக்கோட்டை அருகே விவசாயியியை அரிவாளால் வெட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
நிலக்கோட்டை அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அருளானந்தம் (வயது 40). விவசாயி. இவருக்கும், அவரது உறவினரான பவுல்ராஜ் (36) என்பவருக்கும் தோட்டத்துக்கு செல்லும் பாதை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று காலை பவுல்ராஜூவுக்கும், அருளானந்தத்துக்கும் இடையே முன்விரோதம் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பவுல்ராஜ், தான் மறைத்து வைத்திருந்த அருளானந்தத்தை அரிவாளால் வெட்டினார். பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அருளானந்தத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து பவுல்ராஜை கைது செய்தார்.