தம்பதிக்கு அரிவாள் வெட்டு

கள்ளக்காதலை கண்டித்ததால் தம்பதிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2022-08-13 17:18 GMT

வேடசந்தூர் அருகே உள்ள பச்சலாக்கவுண்டனூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 57). கூலித்தொழிலாளி. அவருடைய மனைவி ராணி (54). இந்த தம்பதியின் மகள் அமுதா (33). இவருக்கு திருமணமாகி கணவர் இறந்து விட்டார். இந்தநிலையில் அமுதாவுக்கும், தங்கச்சியம்மாபட்டியை சேர்ந்த காளிமுத்து (31) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த ராஜேந்திரனும், ராணியும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அமுதாவை சந்திக்க வந்த காளிமுத்துவை அவர்கள் கண்டித்தனர். இதனால் அவர்கள் மீது காளிமுத்து ஆத்திரத்தில் இருந்தார்.

இந்தநிலையில் பச்சலாக்கவுண்டனூருக்கு காளிமுத்து நேற்று வந்தார். பின்னர் தான் வைத்திருந்த அரிவாளால் ராஜேந்திரன், ராணி ஆகியோரை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த தம்பதியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர்கள், மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காளிமுத்துவை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்