ஊராட்சிமன்ற தலைவருக்கு அரிவாள் வெட்டு

வேளாங்கண்ணி அருகே ஊராட்சி மன்ற தலைவரை அரிவாளால் வெட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-02 18:45 GMT

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி அருகே ஊராட்சி மன்ற தலைவரை அரிவாளால் வெட்டிய முதியவரை போலீசார் கைது செய்தனர்.

ஊராட்சி மன்ற தலைவர்

வேளாங்கண்ணியை அடுத்த ரெட்டாலடியை பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 45).இவர் வடக்குபொய்கைநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். மேலும் இவர் குறி சொல்லியும் வந்துள்ளார்.இந்த நிலையில் பிரதாபராமபுரம் நடுத்தெருவைச் சேர்ந்த தனபால் (60) என்பவர் நேற்று முன்தினம் முருகானந்தம் வீட்டுக்கு வந்து அவரிடம் குறி சொல்ல வேண்டும் என வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.அதற்கு சனிக்கிழமையன்று நான் குறி சொல்ல மாட்டேன் என அவர் கூறியுள்ளனர்.

அரிவாள் வெட்டு

தனக்கு குறி சொல்லாததால்ஆத்திரமடைந்த தனபால் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முருகானந்ததை வெட்டி உள்ளார். அப்போது முருகானந்தம் தடுக்க முயன்ற போது அவரது கையில் காயம் ஏற்பட்டது.இது குறித்து முருகானந்தம் கொடுத்தபுகாரின் பேரில் வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனபாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்