முன்னாள் ராணுவவீரருக்கு அரிவாள் வெட்டு

கயத்தாறு அருகே முன்னாள் ராணுவவீரருக்கு அரிவாளால் வெட்டப்பட்டார்.

Update: 2022-11-28 18:45 GMT

கயத்தாறு:

கோவில்பட்டி சண்முகாநகரைச் சேர்ந்த சுப்பாரெட்டியாரின் மகன் பால்சாமி (வயது 75). முன்னாள் ராணுவவீரர். இவர் தனது சொந்த ஊரான நாகம்பட்டி கிராமத்திற்கு வந்துள்ளார். அங்குள்ள குலதெய்வ கோவிலில் சாமி கும்பிடுவதற்காக நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அதே ஊரில் வசிக்கும் சித்தப்பா பெருமாள் ரெட்டியார்( 93) அங்கு வந்துள்ளார். அவர் திடீரென்று மறைத்து வைத்திருந்த பால்சாமியை வெட்டியுள்ளார். இதில் நிலைகுலைந்த பால்சாமியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதை பார்த்தவுடன் பெருமாள் ரெட்டியார் அங்கு தப்பி சென்றுவிட்டாராம். காயமடைந்த பால்சாமி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்