ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு

Update: 2022-07-07 19:49 GMT

திருவிடைமருதூர்:

திருவிடைமருதூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை அரிவாளால் வெட்டிய தி.மு.க. கவுன்சிலர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

முன்விரோதம்

கும்பகோணம் அருகே உள்ள வடுமாங்குடி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பழனிவேல் (வயது23). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த நாகூரான் என்பவரது மகன் ஆசைதம்பிக்கும் (32) கடந்த சில தினங்களுக்கு முன்பு வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டினர். அரிவாள் வெட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ராஜேந்திரன், அவரது மகன்கள் பழனிவேல், ரூபின்பாலமுருகன் (28), ராஜேந்திரன் மனைவி புவனேஸ்வரி (46), மருமகள் திவ்யா (28) ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ராஜேந்திரன் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

தி.மு.க. கவுன்சிலர் உள்பட 4 பேர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ் புதூர் ஊராட்சி 7-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ஆசைதம்பி, கமல் என்கிற மாரியப்பன், பிரசாத், முருகேசன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்