காரியாபட்டி,
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஆண்டிச்சிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ஞானதேசிகன் (வயது 58). மேலச்சிறுபோது கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (31). இவர்கள் 2 பேரும் நரிக்குடி அருகே உலக்குடி கிராமத்தில் உள்ள வயலில் இரவு ஆட்டுக்கிடைபோட்டிருக்கும் போது 25 வயது மதிக்கத்தக்க 4 நபர்கள் ஆடுகளை திருடும் நோக்கத்தில் வந்தனர். இதனை தடுக்க முயன்ற ஞானதேசிகன், மூர்த்தி ஆகிய 2 பேரையும் அரிவாளால் வெட்டிவிட்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதில் காயமடைந்த அவர்கள் 2 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.