மனைவிக்கு அரிவாள் வெட்டு

நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு மனைவியை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-08-15 16:12 GMT

நல்லம்பள்ளி:

தொப்பூர் அருகே ஏலகிரி சென்றாயன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது47). தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலை (34). இவர்களுக்கு 3 மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட பெருமாள் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் மணிமேகலை குழந்தைகளுடன் எல்லுக்குழி கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில், தங்கி தனியார் மருத்துவமனனயில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மாமனார் வீட்டுக்கு சென்ற பெருமாள், மனைவியிடம் தகராறு செய்தார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தாப்பி ஓடி விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெருமாளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்