பள்ளி மாணவர்களுக்கு சிற்பக்கலை பயிற்சி
கோத்தகிரியில் பள்ளி மாணவர்களுக்கு சிற்பக்கலை பயிற்சி அளிக்கப்பட்டது.
கோத்தகிரி,
கோத்தகிரி பகுதியில் நீலகிரி ஆதிவாசிகள் நல சங்க தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படித்து வரும் மாணவ-மாணவிகளுக்கு பாரம்பரிய சிற்பக்கலை மற்றும் நுண்கலை குறித்த ஒரு நாள் பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.
முகாமில் மாதிரி வடிவமைப்பு நிபுணர் சுகனேஸ்வரன் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்ததுடன், சிற்பம் செய்வது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பித்தார். இதில் 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர்.