வைகை ஆற்று பகுதியில் சிற்பி மர்ம சாவு
நிலக்கோட்டை அருகே வைகை ஆற்று பகுதியில் சிற்பி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
நிலக்கோட்டை அருகே உள்ள குண்டலப்பட்டி பிரிவை சேர்ந்தவர் முத்து (வயது 43). இவர் சாமி சிலைகள் செய்து விற்பனை செய்து வந்தார். இவர் கடந்த 9-ந்தேதி வீட்டில் வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை உறவினர் பல இடங்களில் தேடினர். அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று அணைப்பட்டி வைகை ஆற்றில் பேரணை மதகு பகுதியில் காயங்களுடன் முத்து மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் விளாம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வைகை ஆற்று பகுதியில் முத்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.