சிற்பி திடீர் சாவு

திருஉத்தரகோசமங்கையில் சிற்பி திடீரென்று இறந்தார்.

Update: 2023-02-11 18:45 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாங்குடி வளையபேட்டை மாதாகோவில் தெரு பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் ராமராஜ் (வயது34). இவர் ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை மங்களநாதர் கோவில் சிற்ப வேலைக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லை என்று அவர் தங்கியிருந்த அறையில் இருந்துள்ளார். பிற்பகலில் உடன் வேலைபார்த்தவர்கள் சாப்பிட அறைக்கு சென்றபோது ராமராஜ் பேச்சுமூச்சின்றி கிடந்தார். உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.. இதுகுறித்து அவரது மனைவி குஷ்பு (30) அளித்த புகாரின் அடிப்படையில் திருஉத்தரகோசமங்கை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்