தொழிலாளிக்கு கத்திக்குத்து
பெரும்பாறையில் கொடுக்கல்-வாங்கல் தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
பெரும்பாறை புதூரை சேர்ந்தவர் தனபாண்டி (வயது 28). கூலித்தொழிலாளி இவருக்கும், அதே ஊரை சேர்ந்த குட்டி என்ற ராமச்சந்திரன் (35) என்பவருக்கும் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தனபாண்டியை குத்தினார். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரும்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராமச்சந்திரனை கைது செய்தனர்.