பகலில் சுட்டெரித்த வெயில் மாலையில் திடீர் மழை

சங்கராபுரத்தில் பகலில் சுட்டெரித்த வெயில் மாலையில் திடீர் மழை வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

Update: 2022-09-14 17:28 GMT

சங்கராபுரம்

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. சங்கராபுரத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்தது. வெப்பக்கொடுமையை தாங்க முடியாமல் பாதசாரிகள் கையில் குடை பிடித்துக்கொண்டும், தலையில் துணியால் போர்த்திக்கொண்டும் சென்றதை காண முடிந்தது.

இந்த நிலையில் மாலையில் வாகனத்தில் கருமேகங்கள் திரண்டு மழைபெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. பின்னர் மாலை 5 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசான தூறலுடன் பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல மழையின் வேகமும் அதிகரித்தது. சுமார் 30 நிமிடம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது. இதனால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்