ஸ்கூட்டர் திருடியவர் சிக்கினார்

ஓசூரில் ஸ்கூட்டர் திருடியவர் போலீசில் சிக்கினார்.

Update: 2022-10-20 19:00 GMT

ஓசூர்

ஓசூர் சுண்ணாம்பு ஜி.பி. பகுதியை சேர்ந்தவர் நரேஷ் (வயது 32), டிரைவர். இவர் கடந்த 5-ந் தேதி ஓசூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு தன் ஸ்கூட்டரை நிறுத்தி சென்றார். சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்தபோது ஸ்கூட்டரை காணவில்லை. இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில், தேன்கனிக்கோட்டை அடுத்த குடியூரை சேர்ந்த மல்லேஷ் (25) என்பவர் ஸ்கூட்டரை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து மல்லேசை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்