ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அறிவியல் திருவிழா
கொள்ளிடம் அருகே வெள்ளமணல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அறிவியல் திருவிழா நடந்தது
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வெள்ளமணல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வட்டார கல்வித்துறை சார்பில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நடந்தது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லதா தலைமை தாங்கினார். விழாவில் வானவில் மன்ற கருத்தாளர் ராஜஸ்ரீ கலந்துகொண்டு மாணவர்கள் அறிவியல் சிந்தனையை தூண்டும் வகையில் கணிதம்,அறிவியல் மற்றும் கணினி உள்ளிட்டவைகள் குறித்தும் அறிவியல் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையிலும் பல்வேறு சோதனை நிகழ்ச்சிகளை செயல் விளக்கம் மூலம் செய்து காட்டினார். தமிழக முதல்- அமைச்சரின் இந்த அறிவியல் திருவிழா மூலம் மாணவர்கள் நல்ல பயனடைந்து வருகின்றனர் என்று பள்ளி தலைமை ஆசிரியர் லதா தெரிவித்தார். இதில் தன்னார்வலர் வினோதினி,ஊராட்சி உறுப்பினர் வீரபாண்டியன் கிராமத் தலைவர் பாண்டியன்,கிராம கல்வி குழு தலைவர் பூங்கிளி மற்றும் பெற்றோர்,ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தன்னார்வலர் கங்கா நன்றி கூறினார்.