இல்லம் தேடி கல்வி மையத்தில் அறிவியல் திருவிழா
கொள்ளிடம் அருகே காடுவெட்டியில் இல்லம் தேடி கல்வி மையத்தில் அறிவியல் திருவிழா நடந்தது
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அலக்குடி ஊராட்சி காடுவெட்டி கிராமத்தில் உள்ள இல்லம் தேடி கல்வி மையத்தில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா நடந்தது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாலு தலைமை தாங்கினார். இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் ஷர்மிலி வரவேற்றார்.ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினி ரமேஷ்,ஊராட்சி உறுப்பினர் சுடர்மணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம் அகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வானவில் மன்ற கருத்தாளர் மீனாட்சிஅருள் கலந்துகொண்டு எளிய பொருட்களை பயன்படுத்தி மாணவர்களின் சிந்தனையை எப்படி தூண்டுவது, கணிதம், அறிவியல் செயல் விளக்கம் மூலம் செய்து காட்டினார். மேலும் கைரேகை, ஓவியம் கிராம வரைபடம் உள்ளிட்ட செயல்களும் செய்து காண்பிக்கப்பட்டன. இவ்விழாவில் தன்னார்வலர்கள் கிருத்திகா, வர்ஷா,விஷாலிகங்கா மற்றும் பெற்றோர் ஆசிரியர் மாணவர்கள் கலந்து கொண்டனர்.