புளியங்குடி:
தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி காந்தி மஹாலில் ஆரஞ்சு ரீடெயில் பைனான்ஸ் இந்தியா பிரைவேட் லிட் மற்றும் மானுடம் வெல்லும் கல்வி அறக்கட்டளை சார்பில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆழ்வார்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார். ஆசிரியர் தங்கராஜ் வரவேற்று பேசினார். தேசிய அறிவியல் விருதாளர் முன்னாள் கல்லூரி கல்வி இணை இயக்குனர் சுப்பையா பாண்டியன் அறிவியல் செயல்முறை விளக்க நிகழ்ச்சியை நடத்தினார்.
ஆரஞ்சு ரீடெயில் பைனான்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் எபனேசர் டேனியல், காந்தி மகால் மருதையா பாண்டியன், ஆசிரியர் வையாளி முத்தையா, முன்னாள் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு காசி விஸ்வநாதன், டாக்டர் சண்முகையா, ஆசிரியர் கார்த்திகேயன், சொக்கம்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் செல்வகுமார், வலங்கையா பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பிளஸ்-2-ல் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் முகிலா, துர்கா பிரியவர்ஷினி, 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகள் ஜமீனா ரோஷினி, ஸ்ரீ அஸ்வின் ஆகியோருக்கு பரிசு வழங்கப்பட்டது.