பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி

நெல்லை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது.

Update: 2022-11-02 19:14 GMT

நெல்லை பிரான்சிஸ் சேவியர் என்ஜினீயரிங் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான 'டெக்னோ பெஸ்ட்' என்ற தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது.கல்லூரி முதல்வர் ஜான்சன் வரவேற்று பேசினார். இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்களது அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தனர். கல்லூரி நிறுவனர் கிளிட்டஸ் பாபு, கல்லூரி தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் கலந்து கொண்டு அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினர். சிறந்த அறிவியல் படைப்புகளை பார்வைக்கு வைத்திருந்தவர்களுக்கு பலோன் ஆர்கிடெக் உரிமையாளர் ஜான் கிருபாகரன் ரொக்கப்பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பேராசிரியர்கள் சங்கரநாராயணன், ராஜ்குமார் ஆகியோர் செய்து இருந்தனர். கல்லூரி நிர்வாக அதிகாரி பட்டன் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்