அறிவியல் கண்காட்சி

நெல்லை பொறியியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.

Update: 2023-02-02 19:27 GMT

இட்டமொழி:

மருதகுளம் நெல்லை பொறியியல் கல்லூரியில் ரோபோ எக்ஸ்போ 2023 அறிவியல் கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜின்னா ஷேக் முகம்மது தொடங்கி வைத்தார். கண்காட்சியில் மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 300 பேர் தங்கள் அறிவியல் படைப்புகளை வைத்தனர். வினாடி-வினா போட்டியும் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் முஜீப்முகம்மது முஸ்தபா, பிச்சம்மாள், சுப்புலட்சுமி, அனுலா பியூட்டி, அக்பர் உசேன், பிரின்ஸ், பர்வதவர்த்தினி ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்