மாணவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்ப கருத்தரங்கம்
கூடலூர் தொழிற்பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது.
கூடலூர்,
கூடலூர் தோட்ட தொழிலாளர் தொழிற்பயிற்சி மையத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம் சார்பில் மாணவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்ப கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு பயிற்சி மைய முதல்வர் சாஜி ஜோர்ஜ் தலைமை தாங்கினார். ரவீந்திரன் முன்னிலை வகித்தார். பயிற்சியாளர்கள் மணிபாலன், விக்னேஷ்குமார், சிவசங்கர், சோலை கண்ணன், தொழிற்பயற்சி மைய ஆசிரியர் செல்வகுமார் ஆகியோர் செயல்முறை பயிற்சிகள் வழங்கினர். இதில் ரிமோட் சென்சார், தண்ணீர் நிரம்பியதும் தானாக மோட்டார் நிற்கும் வழிகாட்டி, தானியங்கி தெருவிளக்கு இயக்கம், தானியங்கி போக்குவரத்து நிலைபாடு குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சி பெற்ற மாணவர்கள் அருகே உள்ள பழங்குடியினர் மற்றும் சிறுவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதில் மாணவர்கள் கலந்துகொண்டனர்.