அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு

Update: 2023-01-02 19:00 GMT

பொள்ளாச்சி

பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் ஆனைமலை தாலுகாவிற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, ஊராட்சி ஒன்றிய பள்ளி, சுயநிதி பள்ளி, நகராட்சி பள்ளிகளில் ஒன்று முதல் 7-ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்க்ள. 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து வகை பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கியது. 23-ந் தேதியுடன் அரையாண்டுத் தேர்வு நிறைவு பெற்றது. இதையடுத்து டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 1-ம் தேதி வரை மொத்தம் 9 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு, இம்மாதம் முதல் ஏப்ரல் வரையிலான 3-ம் பருவத்திற்கான அனைத்து பாடபுத்தகங்களும், அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் வழங்கினார்கள். பள்ளி திறந்த முதல் நாளில் புத்தகம் வழங்கப்பட்டதால் மாணவர்கள் ஆர்வத்துடன் புத்தகத்தை பார்த்து படித்தனர். இதேபோல் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவ மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. அரையாண்டு தேர்வு முடிந்து மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர். இதேபோல கோவை மாநகர பகுதிகளில் உள்ள பள்ளிகளும் திறக்கப்பட்டன. பள்ளிக்கு மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர். மேலும் விடுமுறைக்கு பின் நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்