சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் - கலெக்டர்கள் அறிவிப்பு

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்று கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

Update: 2022-11-03 01:48 GMT

சென்னை,

வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கி தீவிரம் அடைந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்வதும், சிறிது நேரம் இடைவெளி விட்டு மீண்டும் பெய்வதுமாக இருந்தது. மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்