மாத்தூர் அரசு காப்பகத்தில் இருந்த பள்ளி மாணவி மாயம்

மாத்தூர் அரசு காப்பகத்தில் இருந்த பள்ளி மாணவி மாயமானார்.

Update: 2022-08-24 18:34 GMT

ஆவூர்:

விராலிமலை ஒன்றியம், மாத்தூரில் அன்னை சத்யா அரசு ஆதரவற்றோர் பெண் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இதில் தாய், தந்தை அல்லது பெற்றோர் யாராவது ஒருவரை இழந்த ஆதரவற்ற பெண் குழந்தைகள் தங்கி மாத்தூரில் உள்ள அரசு சிறப்பு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த காப்பகத்தில் நர்மதா தேவி என்பவர் கண்காணிப்பாளராக உள்ளார். இந்நிலையில் காப்பகத்தில் தங்கி இருந்து மாத்தூர் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த மணப்பாறை கணேசன் என்பவரது மகள் ஷாலினி (வயது 12) என்பவர் நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு செல்வதாக சென்றவர் மாலை வரை காப்பகத்திற்கு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்காததால் கண்காணிப்பாளர் நர்மதாதேவி இதுகுறித்து மாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவியை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்